அஸ்வகந்தா லேகியம்:
“நாற்பது வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகின்றன. அந்த பலவீனத்தை ஈடுகட்ட இதை குடிங்க” என்று விளம்பரத்தில் சொல்வார்களே. அந்த வயதாவதால் வரும் பலவீனத்தை குறைக்க உதவும் சித்த மருந்துகளில் ஒன்று தான் அஸ்வகந்தா லேகியம். அஸ்வகந்தா லேகியம் அமுக்கரா கிழங்கு, சர்க்கரை, பசுநெய் கொண்டு பழங்கால சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அமுக்கரா கிழங்கும், சர்க்கரையும் அதிகளவில் இருந்தாலும் திராட்சை, பேரிச்சை, சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஜாதிக்காய், கோரைக்கிழங்கு போன்ற வேறு பல பொருட்கள் …