ஆயுர்வேத மூலிகைகள் பொடிகளின் மருத்துவ பயன்கள் :
- ஆவாரம் பூ :
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும், உடல் பொன்னிறம் பெறும்.
வில்வம் :
குடல் புண், வாந்தி, மயக்கம் இவைகளுக்கு சிறந்தது.
சித்தரத்தை :
சளி, கரப்பான், வாய்வு, தலைவலி மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும்.
முடக்கத்தான் :
முடக்கு வாதம், வாய்வு, வாதம் போக்க வல்லது.
- கீழாநெல்லி :
மஞ்சள் காமாலை, பசியின்மை, வாந்தி, பித்தம், நீரிழிவுக்கு சிறந்தது.
பிரண்டை :
குருதி மூலம், வயிற்றுவலி, குருதிக் கழிச்சல், கால் குடைச்சல் நீக்கும், பசி உண்டாகும்.
முருங்கை விதை :
உடல் வலிமை, நீர்த்துப்போன விந்தை கெட்டிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
சுக்கு :
சளி, பித்தம், அஜீரணம், வாய்வு, புளியேப்பம், பசியின்மைக்கு சிறந்த பலனளிக்கும்.
ஆடாதோடா :
சளி, இருமல், இளைப்பு, காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கும்.
- கருவேப்பிலை :
வயிற்று உளைச்சல், பித்தம், சுரம் நீங்கும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.
மருதம் பட்டை :
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கும்.
தூதுவளை :
இருமல், இளைப்பு, ஜலதோஷம் ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த பலனளிக்கும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி :
கல்லீரல் கோளாறுகள், தலைமுடி உதிர்தல், மஞ்சள் காமாலை, ரத்த சோகை மற்றும் கண்களை பாதுகாக்கிறது.
வல்லாரை :
இரத்த சுத்தி, ஞாபகசக்தி, உடல் வலிமையைப் பெருக்கும்.
நெல்லி முள்ளி :
உடல் சூடு, பித்த வாந்தி, எலும்புருக்கி நோயை போக்கும், வைட்டமின் சி நிறைந்தது, எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
ஜாதிக்காய் :
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும், வீரிய விருத்தியை உண்டாக்கும்.
வெட்டிவேர் :
குடல் புண், தோல் நோய், நீரழிவு நோயால் உண்டாகும் கட்டிகளை போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் :
இதைத் தேய்த்து குளித்தால் புண்கள், கரப்பான், நுண்புழுக்கள் நீங்கும்.
முல்தானி மெட்டி :
பருக்கள், முகப்பரு, கரும்புள்ளி முதலியவற்றை நீக்கும்.
திப்பிலி :
இருமல், இளைப்பு, சுரம், கோழை மற்றும் வாய்வு நீக்கும்.
ஓரிதழ் தாமரை :
உடலுக்கு அழகைத்தரும், உடல் சக்தி, தாது சூடு, இரத்த சோகைக்கு சிறந்தது.
முருங்கை இலை :
அதிக மந்தம், உட்சூடு, தலைவலி, கண் நோய் நீக்கும். மூளை சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.
கழற்சிக்காய் :
விரை வீக்கம், விரை வாய்வு, அடிக் குடலை பற்றிய வாய்வு, குடலிறக்கத்திற்கு தீர்வாகும்.
ரோஜாப்பூ :
உடலைக் குளுமை படுத்தும், மலச்சிக்கலை போக்க வல்லது. இரத்த விருத்தியை உண்டாக்கும்.
நெருஞ்சில் :
சிறுநீரடைப்பு, சிறுநீரக கற்கள் மற்றும் உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது.
துளசி :
வெறிநோய், இருமல், சளி, சுரம் கை கால் உளைச்சல் ஆகியவை நீங்கும்.
குப்பைமேனி :
சளி, குடல் புழுக்கள், மலச்சிக்கல் மற்றும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
அஸ்வகந்தா :
உடல் தேற்றி மற்றும் நரம்புத் தளர்ச்சி, தாது பலவீனத்திற்கு சிறந்த பலனளிக்கும்.
செம்பருத்தி பூ :
தலைமுடி வளர்ச்சி, பொடுகு நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி அளித்து, சருமத்தை பளபளப்பாக்கும்.
மேலும் மூலிகைகள் பொடிகளின் பயன்கள் தொடரும்
உணவே மருந்து, தீதான இரசாயன கலவைகளற்ற உணவு பொருட்களை உண்டு, நோயற்ற வாழ்வுதனை வாழ்வோம்.
இயற்கையான முறையில் விளைவித்த மற்றும் தயாரிப்பு இரசாயனங்கள் கலவைகள் இல்லாத உணவு பொருட்கள் மற்றும் மூலிகை பொடிகள் வாங்க www.nannilamorganics.com இணையதளம் மூலமாகவோ நேரடியாகவோ வங்கி நோயற்ற ஆரோக்கியத்தை பெறுங்கள்..
இயற்கை நேசிப்போம்… சுற்றுசூழலை பாதுகாப்போம்…