கண்களை பாதுகாக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகள் :

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண்…

நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணிகளை செய்கின்றன. அதில் மிக கனவமும் பெரும் பணியான காணும் பணியை கண்கள் செய்கிறது. ஆயுள் முழுமைக்கும் கண் பார்வை வலுவாக இருக்கவும் கண்கள் பாதிக்காமல் இருக்கவும் முறையான பராமரிப்பு மேற்கொள்வது மிக மிக அவசியம். அவ்வாறு கண்களை பராமரிக்கும் தரும் சில அற்புத மூலிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்..

கண் ​பார்வை குறைபாடு

கண் பார்வை பிரச்சனைகள் பொதுவாக எல்லோருமே தங்களது நடுத்தர வயதில் சந்திக்க நேரிடும். ஆனால் இது தற்காலிகமானதுதான். சாளரம் என்று சொல்லகூடிய பார்வை குறைபாடு நடுத்தர வயதுக்கு பிறகு எல்லோருக்கும் வரக்கூடும். கண் பார்வைகள் தெளிவில்லாமல் இருக்கும் இந்த காலத்தை சற்று நிதானித்து கடந்துவிட்டால் இயல்பாக மீண்டும் பார்வைத்திறன் சரியாகும்.

இப்போது கண்களுக்கு தான் அதிகம் வேலை கொடுக்கிறோம். அதிலும் செல்ஃபோன், லேப் டாப், கணினி என நேரம் செல்வதே தெரியாமல் கண்களுக்கு அதிக பளு கொடுக்கும் இந்த காலத்தில் பார்வை குறைபாடு எளிதாக விரைவாக வந்துவிடுகிறது. இதை தடுக்கவும் கண்களை வலுப்பெறவும் சில மூலிகைகள் உண்டு. அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

கண் எரிச்சல் போக்கும் – ​நெய்ச்சட்டிக்கீரை

வயல் வரப்புகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் வரக்கூடிய கீரை இது. நெய்ச்சட்டி கீரை என்று அழைக்கப்படும் இது பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். கண் எரிச்சல் இருக்கும் போது இந்த கீரையை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து கண்களில் ஒரு துளி வீதம் காலை மாலை விட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

மங்கலான கண் பார்வை சரியாக்கும் – ​சம்பங்கிபூ

எளிதாக கிடைக்கும் இந்த சம்பங்கி பூ கண் பார்வை மங்கலாக இருப்பவர்களுக்கு மிகுந்து பயன்களைத் தரும். சம்பங்கி மரத்தின் இளந்தளிரை கொண்டு வந்து நன்றாக ஓடும் நீரில் அலசி பிறகு கசக்கினால் சாறு கிடைக்கும். சாறை பிழிந்து சுத்தமான சிறு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதே அளவு பன்னீர் கலந்து நன்றாக கலக்கவும். இதை காலையும் மாலையும் கண்களில் இரண்டு துளி விட்டு வந்தால் மங்கலான பார்வை தெளிவடையும். கண்கள் பளிச்சிடும்.

கண் பார்வை சரியா50gக்கும் – ​ஜாதிக்காய்

ஜாதிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஜாதிக்காயை கழுவி எடுத்து அம்மியில் இடித்து பொடிப் பொடியாக்கவும். இதை காய்ச்சாத பசும்பாலில் கலந்து நன்றாக மை போல் அரைத்தெடுக்கவும். இதை இரவு தூங்கும் போது கண்களை சுற்றி பற்று போல் போட்டு கொள்ள வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் கண்கள் கழுவிவர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதை செய்து வந்தால் கண் உஷ்ணத்தால் வரும் கண் கட்டி வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும். கண் பார்வை தெளிவு பெறும்.

கண் கட்டியை அகற்றும் – ​திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சைலை இலையை நீரில் அலசி பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்த சாறை கண் கட்டிகள் மேல் பூசி வர வேண்டும். சாறு உலர உலர சுத்தமான வெள்ளைத்துணியில் துடைத்து மீண்டும் மீண்டும் பற்று போல் கட்டி மீது போட வேண்டும். இந்த சாறு பற்று போல் போட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

மேலும் இயற்கையோடு வாழ்க்கை வளமாக்க உடல் ஆரோக்கியம் பெற இரசாயனமற்ற இயற்கை உணவு பொருட்களை வாங்கி ஆரோகியமான வாழ்வினை பெற்றிட வாழ்த்துகிறோம்…https://nannilamorganics.com/

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics