Benefits :
Thippili or Pippali has several health benefits, used to cure diseases and increases immunity. Pippali means “drink and digest” and is used as a spice in Indian cooking.
It is known for its various capabilities like curing cough, cold, digestion problems, removing toxins, digestive issues and many more.
பயன்கள் :
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த திரிகடுகம் எனப்படும் மூலிகை மருந்திலும் இடம் பெறும். திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.
உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப் பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது. திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது தனிப்பட்ட முறையில் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவை என்னென்னவென்று இங்கு அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா, இருமல், தொண்டை புண், மூச்சுக்குழாய் அழற்சி என நுரையீரல் பிரச்சனைகளைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதோடு சுவாசப் பிரச்னைகளுக்கும் உதவுகிறது.
மாதவிடாய் தசைப்பிடிப்பு, வலி போன்றவற்றிற்கு உதவுகிறது. பாலுணர்ச்சி, கருவுறாமை பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இதன் திப்பிலி சாறு இனப்பெருக்க அமைப்பு பிரச்னைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்தக்கூடாது.
கருவை கலைத்து விடும் ஆற்றல் கொண்டது திப்பிலி. எனவே பெண்கள் இதை மருத்துவர் பரிந்துரையின்றி பயன்படுத்தக் கூடாது.
வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல் வலி, வாய்வழிப் பிரச்னைகளைக்கு நிவாரணியாக உள்ளது.
பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக இருக்கிறது. திப்பிலி பழம் பல்லின் உறுதித் தன்மைக்கு உதவுகிறது.
எனவே திப்பிலி பழத்தில் தயார் செய்யப்பட்ட பேஸ்ட் வாங்கி பயன்படுத்தலாம்.
திப்பிலி தண்டின் சாறு அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் வலி நிவாரணப் பண்புகளைக் கொண்டுள்ளதால் தொற்று காய்ச்சல், பருவக் காய்ச்சலுக்கு உதவுகிறது.
திப்பிலியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உங்களுக்கு ஃபுட் கிரேவிங்ஸ் இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும்.
திப்பிலி பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வாக இருக்கிறது.
இது ஆயுர்வேத முறையிலும் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. உடல் வலியை போக்க உதவுவதால் அதோடு தூக்கத்தை தூண்டுகிறது.
வாயு பிரச்னை, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு உதவுகிறது. இதில் ப்ரீபயாடிக் என்னும் ஆற்றல் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்ற நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக உண்டாகும் பிரச்னைகளுக்கு உதவுகிறது.
திப்பிலியில் ஆல்கலாய்டு கெமோபுரோடெக்டிவ் என்னும் ஆற்றல் இருக்கிறது. இது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
திப்பிலி வேரின் சாறில் ஆண்டிஹைபர் கிளைசெமிக் மற்றும் ஆண்டிஹைபர் லிபிடெமிக் என்னும் பண்புகள் உள்ளன.
இது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. அதோடு கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளை சரி செய்யவும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.