Benefits :
- Controls Joints pain, back pain and rheumatic pain.
- Increases sexual ability and immunity power. Also known as Wild viagra.
- Controls sugar, cholesterol and Blood pressure.
- Good for Pregnant women to overcome vitamin deficiency.
- Bamboo Rice boiled water can be given as soup to patient for quick recovery.
பயன்கள் :
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.மூங்கில் அரிசியில் அதிகமான கலோரிகள் உள்ளது. அதாவது ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. அதிக பசி ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும். நார்ச்சத்து மிக்கது, உடல் வலிமை பெரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
மூங்கில் அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.
மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
Reviews
There are no reviews yet.